2016-12-02 16:19:00

மனிதாபிமான நடவடிக்கை வழியாக சிரியா புலம்பெயர்ந்தவர்கள்


டிச.02,2016. கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் கூட்டு முயற்சியால், சிரியா நாட்டு நூறு புலம்பெயர்ந்தவர்கள், லெபனான் நாட்டிலிருந்து இவ்வெள்ளியன்று உரோம் வந்து சேர்ந்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை வழியாக, இதுவரை 500 புலம்பெயர்ந்தவர்கள் உரோம் வந்துள்ளனர்.

சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு, வால்தென்சியன் மற்றும் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபைகள் ஆகியவை இணைந்து நடத்தும் இத்திட்டத்திற்கு, இச்சபைகளே பொறுப்பேற்று நடத்துகின்றன.

புகலிடம் தேடும் இந்த மக்கள், தங்கும் அனுமதியுடன், சட்டப்படி இத்தாலியில் நுழைவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் இத்தாலிக்கு வந்தவுடன், இக்கிறிஸ்தவ சபைகள், இவர்களை ஏற்று, இவர்கள் தங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அமைத்துக் கொடுக்கின்றன.

இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு மனிதாபிமான திட்டத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரவேற்றுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.