2016-12-06 16:09:00

அமெரிக்காவில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக 59 தாக்குதல்கள்


டிச.06,2016. கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் காரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டில், கடந்த ஆண்டில், 59 தாக்குதல்களில், 69 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FBI எனும் அமெரிக்க மத்திய அரசின் புலானாய்வுத் துறையின் கூற்றுப்படி, கத்தோலிக்கர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில், 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதம், இனம், பாலினம், போன்ற காரணங்களின் அடிப்படையில், 2015ல் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில், யூதர்களுக்கு எதிராக 695ம், இஸ்லாமியர்களுக்கு எதிராக 301ம், பிரிந்த கிறிஸ்தவ சபையினருக்கு எதிராக, 71ம் இருந்ததாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Catholic Culture / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.