2016-12-06 15:59:00

சமூகச் சேவையாற்றும் தமிழக பழங்குடியினர் சமூகம்


டிச.06,2016. விஷப்பாம்புக் கடிக்கு நஞ்சு முறிப்பானாக, மாற்று மருந்து ஒன்றை வழங்கத் துவங்கியுள்ளது, சென்னையின் பழங்குடியினர் கூட்டுறவு சங்கம்.

1972ம் ஆண்டுவரை பாம்புகளைப் பிடித்து, அவைகளின் தோல்களை விற்றுவந்த இருளர் சமூகம், அவ்வாறு விற்பது தடைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது, பாம்பின் நஞ்சிலிருந்து, பாம்புக் கடிக்கு மாற்று மருந்தைக் கண்டுபிடித்து, சமூகத்திற்கு பெரும் சேவை ஆற்றி வருகின்றது.

2011ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 46 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்.

பாம்புக்கடி மாற்று மருந்து வழியாக சமூகத்திற்கு சிறப்புச் சேவையாற்றும் இந்த இருளர் சமூகத்தினர், பாம்பைப் பிடித்து நஞ்சை இறக்கி, அந்த நஞ்சு, குதிரைகளின் உடம்பில் செலுத்தப்பட்டு, நஞ்சு முறிப்பான் மாற்று மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தே மீண்டும், இந்த பழங்குடி சமூகத்தின் கூட்டுறவு சங்கம் வழியே மக்கள் தேவைக்கென வழங்கப்படுகிறது.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.