2016-12-08 14:41:00

திருவருகைக்காலச் சிந்தனை : பார்வை மாறினால் பாதை மாறும்


அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அனுபவங்கள், இவற்றின் மீதான நமது பார்வை, நமது வாழ்வுப் பாதையை வடிவைமைக்கின்றன. இப்பார்வை மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றது.

ஒரு சிலர் நேர்மறை எண்ணத்தோடு  பார்க்கின்றனர்.

மறு சிலர் எதிர்மறை எண்ணத்தோடு பார்க்கின்றனர்.

ஒரு சிலர் நம்பிக்கையோடு பார்க்கின்றனர்.

மறு சிலர் சந்தேகத்தோடு பார்க்கின்றனர்.

ஒரு சிலர் பயத்தோடு பார்க்கின்றனர்.

மறு சிலர் எதிர்பார்ப்போடு பார்க்கின்றனர்.

இதில் எது சரி எது தவறு என்று பார்க்கும்பொழுது அது தீர்மானிப்பவரின் பார்வையை பொருத்து அமைகின்றது.

அனால் நம்மில் ஒரு சிலர் பிறர் என்ன சொன்னாலும் சரி என்ன செய்ததாலும் சரி குறையோடுதான் பார்க்கின்றோம். இயேசுவின் காலத்தில், திருமுழுக்கு யோவான் மேலும், இயேசுவின் மேலும், குறை கண்டதுபோன்று நாம் குறைகண்டுகொண்டே இருக்கிறோம்.

நான் மட்டுமே நல்லவன், நான் மட்டுமே அறிவாளி, நான் நினைப்பதுதான் உண்மை என்ற மயக்கத்தில் பிறரைக் குறைகூறிக்கொண்டே இருக்கின்றோம். ஆனந்தத்தை இழக்கின்றோம். நமது பார்வை மாறட்டும், பாதை மாறும். பாதை மாறட்டும், வாழ்வு மாறும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.