2016-12-10 15:55:00

வாஷிங்டன்,இலண்டன் பில்லியன்கள் மதிப்புடைய ஆயுதங்கள் விற்பனை


டிச.10,2016. அமெரிக்க ஐக்கிய நாடு, தனது அரபு கூட்டணி நாடுகளுக்கு, கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய இராணுவத் தளவாடங்களை விற்பதற்குத் தீர்மானித்துள்ளது என, ஊடகங்கள் கூறுகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், போயிங் விமானங்கள் உட்பட, ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், சவுதி அரேபியா, கத்தார், அரபு ஐக்கிய குடியரசு ஆகிய நாடுகளுக்கு, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் உட்பட, ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் விற்பதற்கு, அந்நாட்டு அரசு இசைவு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கு, 351 கோடி டாலர், அரபு ஐக்கிய குடியரசுக்கு, 350 கோடி டாலர், மற்றும், கத்தார்க்கு, 78 கோடியே 10 இலட்சம் டாலர் மதிப்புடைய, இராணுவத் தளவாடங்களை, விற்பதற்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அதேபோல், பிரிட்டனும், பல வளைகுடா நாடுகளுக்கு, ஆயுத விற்பனை செய்வதற்குத் தீர்மானித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.