2016-12-12 16:28:00

வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்களுடன் ஒருமைப்பாடு


டிச.,12,2016. அழிவுகளுக்கு அல்ல, மாறாக, அமைதிக்கும், அலேப்பொ மற்றும் சிரியா மக்களுக்கும் ஆம் சொல்வோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், சிரியா மக்களின் துன்பங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அலெப்போ நகர் என்பது, மக்களையும், குடும்பங்களையும், குழந்தைகளையும், முதியோரையும், நோயாளிகளையும் உள்ளடக்கியது என்பதையும், வரலாற்றாலும், கலாச்சாரத்தாலும், மத நம்பிக்கைகளாலும் நிறைந்து காணப்படும்  நகர் என்பதையும் மறந்து விடக்கூடாது என்றார்.   

உரிமை மீறல்களாலும் பொய்மைத்தன்மைகளாலும் நிறைந்துள்ள இந்த போருக்கு முன்னால், ஒரு புதிய காலாச்சாரத்திற்கு, அதாவது, அமைதி எனும் கலாச்சாரத்திற்கு நாம் ஆம் சொல்லவேண்டும் என விண்ணப்பித்தார், திருத்தந்தை.

இதே ஞாயிறன்று, துருக்கியின் இஸ்தான்புல்லிலும், சொமாலியாவிலும், எகிப்தின் கெய்ரோவிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை போப் இரண்டாம் தவாத்ரோஸ், மற்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தன் நெருக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.