2016-12-13 16:17:00

மிலாடி நபி விழாவுக்கு கத்தோலிக்கத் தலைவர்கள் வாழ்த்து


டிச.13,2016. இறைவாக்கினர் முகமது அவர்களின், மிலாடி நபி பிறந்த நாள் விழாவையொட்டி, முஸ்லிம் சகோதரர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் ஜம்மு-காஷ்மீர் மாநில கத்தோலிக்கத் தலைவர்கள்

டிசம்பர் 13, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட மிலாடி நபி விழாவுக்கென, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள, முஸ்லிம் சகோதரர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அம்மாநில கத்தோலிக்கத் தலைவர்கள், அப்பகுதியில் சமய நல்லிணக்கம், உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதி நிலவச் செபிப்பதாகவும் கூறியுள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகரிலுள்ள Hazratbal மசூதியில், ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள், இத்திங்களன்று செபித்தனர். இம்மசூதியில், வைக்கப்பட்டுள்ள இறைவாக்கினர் முகமது அவர்களின் திருப்பண்டம் (முகமது அவர்களின் தாடியின் ஒரு முடி), ஒவ்வோர் ஆண்டும் மிலாடி நபி அன்று, பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்கப்படுகின்றது என்று, UCA செய்தி கூறுகிறது. 

1635ம் ஆண்டில், அராபியர்கள், இத்திருப்பணடத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தனர் என்றும், 1700ம் ஆண்டில், இது காஷ்மீருக்குக் கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.