2016-12-16 16:43:00

மனித வர்த்தகம் என்துபது, மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்று


டிச.16,2016. மனிதர்களை வர்த்தகம் செய்வது, மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்று என்பதையும், இந்த வர்த்தகத்தை, சரியான மற்றும், உண்மையான முறையில் களைவதற்கு, தங்களுக்கு இருக்கும் நன்னெறி சார்ந்த பொறுப்பையும், ஏற்றுச் செயல்படுமாறு, ஐ.நா. உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார், பேரருள்திரு Janusz Urbańczyk.

OSCE என்ற, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேரருள்திரு Urbańczyk அவர்கள், மனித வர்த்தகத்தை ஒழிப்பது குறித்து, அந்நிறுவனம் நடத்திய, கூட்டத்தில், இவ்வியாழனன்று உரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.

மனித வர்த்தகத்தில் சிக்கியுள்ள சிறாரைக் காப்பாற்றுவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படுமாறும் கேட்டுக்கொண்ட பேரருள்திரு Urbańczyk அவர்கள், போர்கள் மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி, கட்டாயமாக தங்கள் இல்லங்களைவிட்டு வெளியேறும் சிறார், போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கி, பலவாறு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்கை நடைமுறைப்படுத்தவதற்கு உறுதியளித்த உறுப்பு நாடுகள், அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதற்கெதிராய் நடவடிக்கைகள் எடுப்பதற்கு, தங்களின் அர்ப்பணத்தைப் புதுப்பித்திருப்பதையும் சுட்டிக் காட்டினார், பேரருள்திரு Urbańczyk. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.