2016-12-20 16:38:00

ஜெர்மன் திருஅவையின் அனுதாபச் செய்தி


டிச.20,2016. ஜெர்மனியின் கிறிஸ்மஸ் சந்தையில் திங்களிரவு கனரக வாகனம் ஒன்று புகுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் Reinhard Marx.

பெர்லின் நகருக்கு மேற்கேயுள்ள  Breitscheidplatz என்ற பகுதியில் திங்கள் இரவு உள்ளூர் நேரம் 8 மணியளவில் கிறிஸ்மஸ் சந்தையொன்றில் கனரக வாகனம் ஒன்று 40 கிலோமீட்டர் வேகத்தில் புகுந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 48 பேர் காயமுற்றுள்ளனர். இது தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து புலன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Marx அவர்கள், இறந்தவர்கள் மற்றும் காயமுற்றோரின் உறவினர்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடுவதுடன், ஜெர்மன் நாடு சந்தித்துவரும் இந்த துன்பகரமான வேளையில் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து இருக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம்: CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.