2016-12-21 15:34:00

கிறிஸ்மஸ் தாத்தா உடைக்கு எதிரான தடை செல்லாது


டிச.21,2016. கிறிஸ்மஸ் தாத்தா உடையணிவது தவறு என்றும், அப்படி அணிபவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் இந்தோனேசியாவின் உலேமா குழுவினர் அறிவித்திருப்பதை மக்கள் பின்பற்றவேண்டாம் என்று அந்நாட்டு காவல்துறையின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு கடைத் தெருக்களிலும், ஆலய வளாகங்களிலும் மக்கள் கிறிஸ்மஸ்  தாத்தா உடையணிந்து வருவதை தாங்கள் தடைசெய்துள்ளதாக, உலேமா குழுவினர் நவம்பர் மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, வர்த்தகர்களும், கிறிஸ்தவ சமுதாயமும் கலக்கம் அடைந்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

உலேமா குழுவினரின் அறிக்கையைத் தொடர்ந்து, ஒரு சில தீவிரவாதக் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டதையடுத்து, காவல் துறையினர், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும், உலேமா குழுவின் அறிக்கையை யாரும் பின்பற்றத் தேவையில்லை என்றும், காவல்துறை உயர் அதிகாரி, Tito Karnavian அவர்கள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.