2016-12-27 15:20:00

அழிவை நோக்கி ஆஸ்திரேலிய அதிசய பவளப்பாறைகள்


டிச.27,2016. ஆஸ்திரேலியாவிலுள்ள அதிசய பவளப்பாறைத் தொகுதிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிக அற்புதமான இயற்கை அதிசயங்களில் ஒன்றான, ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃப் (Great Barrier Reef) பவளப்பாறைத் தொகுதிகள், இதுவரை இல்லாத வகையில், பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.

நீரின் வெப்பம் உயர்வதால், சில பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பவளப்பாறைகள் அழிந்துள்ளன எனவும், விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் எனவும், ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃப், உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் தொகுதியாகும். இது, 2 கோடியே 50 இலட்சம் ஆண்டுகள் பழமையுடையது மற்றும், இது, 1,050 தீவுகளில், 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளாக உள்ளது. கடலுக்கு அடியில் அந்தப் பவளப்பாறைகளின் நிறமும், சுற்றியுள்ள உயிரினங்களும் கண்ணைக் கவருபவை.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.