2017-01-02 16:33:00

இலங்கை சிறாருக்குக் கல்வியை ஊக்குவிக்கும் கிறிஸ்மஸ் பரிசு


சன.02,2017. கொழும்புவில் பல இனங்கள் இணைந்து வாழும் பகுதியைச் சேர்ந்த 50 சிறார்களின் கல்விக்குத் தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் அடங்கிய கிறிஸ்மஸ்காலப் பரிசை வழங்கியுள்ளனர், இலங்கையின் அமலமரி தியாகிகள் துறவு சபையினர்.

அமலமரி தியாகிகள் துறவுசபையின், 'மதம் மற்றும் சமூக மையம்' கடந்த 10 ஆண்டுகளாக, கிறிஸ்து பிறப்பு காலத்தில் ஏழைச் சிறார்களுக்கு வழங்கிவரும் இந்த அன்பளிப்பு, 'மையத்தின் விருப்பப்படி அல்ல, மாறாக, சிறார்களுக்கு என்னத் தேவைப்படுகிறது என்பதைச் சார்ந்து தயாரிக்கப்பட்டது’ என்றார், அமலமரி தியாகிகள் சபையின் அருள்பணி அசோக் ஸ்டீபன்.

குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்களை வாங்க இயலாத பெற்றோருக்கு உதவும் வகையில், அடுத்த ஆண்டிற்கான பாடப்புத்தகங்களுடன் இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட சிறார்கள், மதுபானம் அருந்துதலின் தீமைகளை வலியுறுத்தி நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினர்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.