2017-01-07 15:06:00

தெய்வநிந்தனை தண்டனையிலிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க..


சன.07,2016. பாகிஸ்தானின், லாகூரின் சாலை ஒன்றில், குரான் புனித நூலின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் கிடந்ததையடுத்து, எழும்பியுள்ள வன்முறையைத் தடை செய்யும் நோக்கத்தில், முஸ்லிம் மற்றும், கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து, பல்சமய குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

தெய்வநிந்தனை குற்றத்தின்பேரில், கடந்த டிசம்பர் 28ம் தேதி கிறிஸ்தவப் போதகர் பாபு ஷபாஸ் அவர்கள், கைதுசெய்யப்பட்ட Kamahan கிராமத்தில், இருபது பேர் கொண்ட, பல்சமய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

லாகூர் தெருவில் கண்டெடுக்கப்பட்ட குரான் பக்கங்களில், ஷபாஸ் அவர்களின் பெயர் இருந்ததாக, உள்ளூர் முஸ்லிம்கள் கூறுகின்றனர். மேலும், சிலர், உள்ளூர் மசூதியின் ஒலிபெருக்கி வழியாக, கிறிஸ்தவரின் வீடுகளுக்குத் தீ வைக்குமாறு அறிவித்து வருவதாக, UCA செய்தி கூறுகின்றது.

இதற்கிடையே, 2011ம் ஆண்டுக்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 2,299 ஆட்களை ஈடுபடுத்தும், 1,296 தெய்வநிந்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இவற்றில் 119 வழக்குகள், இரத்து செய்யப்பட்டன என, பஞ்சாப் மாநில அரசு கூறுகின்றது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.