2017-01-07 15:14:00

பாகிஸ்தானில் அமைதியை ஊக்குவிக்கும் கிறிஸ்மஸ் இரயில்


சன.07,2017. பாகிஸ்தானில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அமைதியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் இரயில் இச்சனிக்கிழமையன்று, Faisalabad வந்தடைந்துள்ளது.

அமைதிக்கான கிறிஸ்மஸ் இரயில் திட்டத்தை, Kamran Michael என்ற கிறிஸ்தவரின் தலைமையில், பாகிஸ்தான் மத்திய அரசும், மனித உரிமைகள் அமைச்சகமும் இணைந்து நடத்தியுள்ளன.

டிசம்பர் 22ம் தேதி, ராவல்பிண்டி நகரிலிருந்து புறப்பட்ட, இந்தக் கிறிஸ்மஸ் இரயில், பேஷ்வார், லாகூர், முல்ட்டான், கராச்சி ஆகிய நகரங்களைக் கடந்து, இச்சனிக்கிழமையன்று, Faisalabad வந்தடைந்துள்ளது.

ஐந்து பெட்டிகளைக் கொண்டிருக்கும் இந்த இரயில், மாலைகள், விளம்பரங்கள், கிறிஸ்மஸ் மரங்கள், இயேசு பிறப்பு நிகழ்வு, பாகிஸ்தானின் பெரிய ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்த திருவுருவங்கள் போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைதிக்கான கிறிஸ்மஸ் இரயில் திட்டம், அரசு அதிகாரிகள், பொது மக்கள் என, பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.