2017-01-09 16:32:00

நேபாளத்திற்கு இந்திய கத்தோலிக்க துறவு சபை உதவி


சன.09,2017. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நேபாளத்தில் ஒன்பதாயிரம் பேரின் உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சியால் அழிவுக்குள்ளான கட்டடங்களை மீண்டும் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர் இந்திய கிளரேசியன் துறவு சபையினர்.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், முதல் கட்டமாக, ஒரு பள்ளியையும், அறுபது நிரந்தர வீடுகளையும் கட்டத் துவங்கியுள்ளனர் கிளரேசியன் துறவு சபையினர்.

'நேபாளத்திற்கான பெங்களூரின் அக்கறை' என்ற தலைப்பில் நான்கு கிளரேசியன் துறவு சபை அருள்பணியாளர்களால், பல்சமய உதவியுடன் துவக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, இஸ்பெயின் நாட்டின் கிளரேசியன் துறவுசபை பெருமளவான உதவியைச் செய்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன், அதாவது, கடந்த டிசம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ள கல்விக்கூடமும், வீடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.