2017-01-21 15:52:00

இறையடியார் Trigolo பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஏற்பு


சன.21,2017. கப்புச்சின் துறவு சபையைச் சேர்ந்தவரும், மரியாவின் ஆறுதல் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவருமான இறையடியார் Arsenio da Trigolo (ஜூன் 13,1849-டிச.10,1909)அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர்நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி மாலை சந்தித்து, இப்புதுமை மற்றும் ஏழு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களைச் சமர்ப்பித்தார். அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கு உதவும் இவ்விபரங்களை, திருத்தந்தையும் ஏற்றுக்கொண்டார்

1887ம் ஆண்டு பிறந்து 1934ம் ஆண்டில் இறந்த மறைமாவட்ட அருள்பணி Raimondo Jardón Herrera; 1897ம் ஆண்டு பிறந்து, 1982ம் ஆண்டில் இறந்த மறைமாவட்ட அருள்பணி Giovanni Sáez Hurtado; 1880ம் ஆண்டு பிறந்து 1952ம் ஆண்டில் இறந்த பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி Ignazio Beschin; 1909ம் ஆண்டு பிறந்து 1979ம் ஆண்டில் இறந்த சலேசிய சபை அருள்பணி Giuseppe Wech Vandor; 1898ம் ஆண்டு பிறந்து 1976ம் ஆண்டில் இறந்த சலேசிய சபை அருள்பணி Francesco Convertin; 1897ம் ஆண்டு பிறந்து 1981ம் ஆண்டில் இறந்த, திருஇதய சகோதரிகள் சபையை ஆரம்பித்த Santina Maria Addolorata; 1901ம்ஆண்டு பிறந்து 1947ம் ஆண்டில் இறந்த பொதுநிலை விசுவாசி Giovanni Tyranowski ஆகிய இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.