2017-01-24 16:02:00

2017 பார்வை ஆண்டு, டெல்லி உயர்மறைமாவட்டம்


சன.24,2017. கண் தானம் பற்றிய விழிப்புணர்வை அனைத்துப் பங்குகளிலும், பள்ளிகளிலும் ஏற்படுத்தவும், கண்தானத்தை ஊக்குவிக்கவும், டெல்லி உயர்மறைமாவட்டம், 2017ம் ஆண்டை, பார்வை ஆண்டு என அறிவித்துள்ளது.

இம்மாதம் 18ம் தேதி, டெல்லி உயர்மறைமாவட்டப் பேராயர் அனில் கூட்டோ அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட, ஏறக்குறைய நூறு அருள்பணியாளர்கள், தங்களின் கண்களைத் தானம் செய்யவும், அவ்வுயர்மறைமாவட்டத்திலுள்ள அனைத்து 65 பங்குகளிலும், 16 கத்தோலிக்கப் பள்ளிகளிலும் கண்தானத்தை ஊக்குவிக்கவும் உறுதி வழங்கினர்.

டெல்லி உயர்மறைமாவட்டத்தின் செத்னாலயா சமூகநலப் பணி மையம், இந்நடவடிக்கையை ஏற்று நடத்தும் எனவும், டெல்லி உயர்மறைமாவட்டம் நடத்தும் திருக்குடும்ப மருத்துவமனையில், கண் வங்கி தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், செத்னாலயா இயக்குனர், அருள்பணி சவரி ராஜ் அவர்கள் அறிவித்தார்.

இந்தப் பார்வை ஆண்டில், 300க்கும் மேற்பட்ட, கண் மாற்றுச் சிகிச்சை வழங்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக, அருள்பணி சவரி ராஜ் அவர்கள் மேலும் அறிவித்தார்

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.