2017-01-28 15:49:00

எல் சால்வதோரில் அமைதி உரையாடலுக்கு இடைநிலை வகிக்க ஐ.நா.


சன.28,2017. எல் சால்வதோர் நாட்டில், அரசுக்கும், குற்றக் கும்பல்களுக்கும் இடையே, ஐ.நா. நிறுவனம் இடைநிலை வகித்து, அமைதிக்கான உரையாடல்களை நடத்துமாறு,  கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எல் சால்வதோர் நாட்டின் லூத்தரன் மற்றும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகள், இவ்வாறு, ஐ.நா.வுக்கு வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார், லூத்தரன் ஆயர், Medardo Gomez.

Mara Salvatrucha என்ற குற்றக் கும்பலைச் சேர்ந்த குடும்பங்களின் இளையவர்கள், தாங்கள் நடத்தும் செப வழிபாடுகளில் கலந்துகொள்வதால், அக்குடும்பங்கள் வழியாக, அக்குற்றக் கும்பலைச் சந்திக்க முயற்சிப்பதாகவும், கூறினார் லூத்தரன் ஆயர், Gomez.

இதற்கிடையே, எல் சால்வதோரில் அமைதி உரையாடல்களில் இடைநிலை வகிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவை தயாராக இருப்பதாக, சான் சால்வதோர் துணை ஆயர் ரோசா சாவேஸ் அவர்கள், சில நாள்களுக்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.