2017-02-03 16:11:00

இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களுக்கு, கர்தினால் டோப்போ


பிப்.03,2017. நம் தினசரி வாழ்வில் இறைவனை சந்திக்கவும், அந்த அனுபவத்தை மக்களோடு பகிர்ந்துகொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, இந்திய கர்தினால் டெலெஸ்போர் டோப்போ அவர்கள், இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களிடம் கூறினார்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் சனவரி 31ம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களின் 29வது நிறையமர்வு கூட்டத்தில் உரையாற்றிய இராஞ்சி பேராயர் கர்தினால் டோப்போ அவர்கள், குழந்தை இயேசுவை எருசலேம் கோவிலில் சந்தித்த சிமியோன் மற்றும் அன்னா இருவரையும் இறை அனுபவம் பெற்றவர்கள் என்று எடுத்துரைத்தார்.

ஆயர்கள் என்ற முறையில், இறைவனைச் சந்திக்கும் அனுபவம் நம் வாழ்வில் தொடரும்போது, அத்தகைய அனுபவம், நம்மை மக்களுக்கு நல்வழி காட்டும் ஒளியாக மாற்றும் என்று கர்தினால் டோப்போ அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 2, நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வுகளில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, குடும்பம், இளையோர் மற்றும் திருவழிபாடு ஆகிய பல்வேறு பணிக்குழுக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று CCBI செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.