2017-02-04 16:05:00

அரசுத்தலைவர் டிரம்ப் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்க...


பிப்.04,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில், சமய சுதந்திரம், கடந்த பல ஆண்டுகளாக, இதுவரை இல்லாத அளவுக்கு, பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது என்று சொல்லி, சமய சுதந்திரத்தை ஊக்குவிக்கும் அரசாணையில், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், கையெழுத்திடுமாறு, அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கருக்கென, இணையதளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், சமய சுதந்திரத்தை மதிப்பதற்கு உதவும், அரசாணையை அரசுத்தலைவர் வெளியிடுவதன் வழியாக, தனிநபர் மற்றும் நிறுவனங்களின் சமய சுதந்திரம் காக்கப்படும் என்று, ஆயர்கள் கூறியுள்ளனர்.

இணையதளத்திலுள்ள (www.votervoice.net/USCCB/Campaigns) இக்கடிதத்தில், தனிநபர்கள் கையெழுத்திடுமாறும், ஆயர்கள் கூறியுள்ளனர்.

சமய சுதந்திரம் குறித்த அரசாணை வரைவுத் தொகுப்பு, கடந்த சனவரி இறுதியில் ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, ஆயர்கள், இணையதளத்தில், இக்கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, டிரம்ப் அவர்களின் குடியேற்றதாரர் குறித்த அரசாணைக்கு, பலதரப்பினரும், எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.