2017-02-08 17:02:00

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றப் பணி திருப்பீட அவை விவரங்கள்


பிப்.08,2017. வத்திக்கானில் இவ்வாண்டு சனவரி 1ம் தேதி முதல் இயங்கிவரும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றப் பணி திருப்பீட அவை, தன் தோற்றம், பணிகள், பொறுப்பாளர்கள் குறித்து, அறிக்கையொன்றை, இப்புதனன்று வெளியிட்டுள்ளது.

2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சுய விருப்பத்துடன் வெளியிட்ட Motu Proprio எனப்படும் திருத்தூது மடலின்படி உருவாக்கப்பட்ட இத்திருப்பீட அவை, புத்தாண்டு நாளன்று செயல்படத் துவங்கியது.   

திருப்பீட நீதி அமைதி அவை, "Cor Unum" அவை, குடியேற்றத்தாரர் மற்றும் பயணிகளுக்கு மேய்ப்புப்பணி வழங்கிவந்த திருப்பீட அவை, மற்றும், நலப்பணியாளர்கள்  திருப்பீட அவை ஆகிய நான்கு அமைப்புக்கள் இணைந்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றப் பணி திருப்பீட அவை உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இந்தப் புதிய அவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த அவையின் ஒரு பகுதியான, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரிவு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளது என்றும் இந்த அவையின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.