சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

கன்னி மரியா கோவிலைச் சுத்தம் செய்த இஸ்லாமிய இளையோர்

மோசூல் நகரில், Daesh பிடியிலிருந்து மீட்கப்பட்ட கோவில்களில் ஒன்று - AFP

16/02/2017 15:22

பிப்.16,2017. ஈராக் நாட்டின் மோசூல் நகர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள கன்னி மரியாவின் கோவில் ஒன்றை, தன்னார்வ இளையோர் குழு ஒன்று சுத்தம் செய்துள்ளது என்று, பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த இக்கோவில், Daesh என்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளால், ஓர் இராணுவ அலுவலகம் போல் பயன்படுத்தப்பட்ட போதிலும், பெருமளவு சேதங்களை அடையவில்லை என்று சொல்லப்படுகிறது.

இஸ்லாமியரை அதிகமாக் கொண்ட, 30 பேர் கொண்ட இளையோர் குழு, இந்தக் கோவிலின் சுவர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும், குப்பைகளையும்  அகற்றி, அக்கோவிலை வழிபாட்டிற்கு ஏற்ற ஓர் தலமாக மாற்றியுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

16/02/2017 15:22