2017-02-17 16:19:00

பாகிஸ்தான் அரசை ஆதரித்தால் ஆலயங்கள் தாக்கப்படும்


பிப்.17,2017. பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய சிறுபான்மையினரும், அரசு நிறுவனங்களோடு உறவுகளின்றி இருந்தால், அவை தாக்கப்படமாட்டா என, ஓர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு கூறியிருப்பதை, புரிந்துகொள்வது கடினமாக உள்ளது என, கராச்சி பேராயர், ஜோசப் கூட்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

லாகூரில், பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு முன்பாக, அண்மையில் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தான் தலிபான் அமைப்போடு தொடர்புடைய, Jamaat-ul-Ahrar என்ற குழு, இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, பேராயர், ஜோசப் கூட்ஸ் அவர்கள், தலிபான் அமைப்பு என்ன நினைக்கின்றது, எதிரிகளை எவ்வாறு விளக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது எனவும், புல்லில் பாம்பு நழுவிச் செல்வது போன்று அந்த அமைப்பின் வார்த்தைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

தலிபானுக்கும், அந்த அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்களுக்கும், தண்டனை வழங்குவதற்கு, நீதிமன்றங்கள்கூட அஞ்சுகின்றன எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.