2017-02-20 16:29:00

நேபாள கட்டுமான உதவிப் பணிகளில் இயேசு சபையினர்


பிப்.20,2017. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்விக்கூடம் ஒன்றை, தங்கள் செலவில் மீண்டும் கட்டியெழுப்பி, அக்கல்வி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர், இயேசு சபையினர்.

2015ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் நேபாளத்தின் Dolakha மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஏழு பள்ளிகளுள் Shree Haleshwor உயர் நிலைப்பள்ளிக் கட்டிடத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கள் செலவிலேயே கட்டியெழுப்பி, அக்கல்வி நிறுவனத்திடமே இலவசமாக வழங்கிய இயேசு சபையினர், குழந்தைகளின் படிப்பை மனதில் கொண்டு, இவ்வுதவியை ஆற்றியுள்ளதாக அறிவித்தனர்.

நேபாளத்தில் கட்டுமான உதவிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயேசு சபையினருக்கு இங்கிலாந்தின் இயேசு சபை பணி மையம், 12,500 டாலர்களைக் கொடுத்து உதவியுள்ளது.

ஏற்கனவே, நேபாளத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பள்ளிகளைக் கட்டுவதற்கு உதவியுள்ள இயேசு சபையினர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்குரிய உபகரணங்களையும் இலவசமாக வழங்கியுள்ளனர்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.