2017-02-23 15:38:00

பூமியின் அளவைக் கொண்ட ஏழு கோளங்கள் கண்டுபிடிப்பு


பிப்.23,2017. பூமியின் அளவைக் கொண்ட ஏழு கோளங்கள், ஒரு விண்மீனைச் சுற்றிக்கொண்டிருப்பதாக வானியல் ஆறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

அக்கோளங்களில் உள்ள பிற பண்புகளை பொருத்து, அவற்றின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், சுற்றிவரும் ஏழு கோளங்களில் மூன்றில் மட்டுமே, உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் விண்மீன் டிராபிஸ்ட்-1. நிறை குறைந்த இந்த விண்மீனைத்தான் இந்த ஏழு கோளங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இக்கோளங்கள், நாசாவின் ஸ்பிட்சர் (NASA's Spitzer) விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடும் மற்றும் பல நிலம் சார்ந்த ஆய்வுகளின்படியும் கண்டறியப்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ (Nature) என்ற ஆய்விதழில் விவரிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.