2017-03-07 16:01:00

பூர்வீக மக்களின் நிலங்களைப் பாதிக்கும் சட்டங்கள் வேண்டாம்


மார்ச்,07,2017. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நில உரிமை குறித்த இரண்டு சட்டங்களுக்கு, அம்மாநிலக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும், பூர்வீக இன விவசாய மக்களைக் கொண்டிருக்கும் இம்மாநிலத்தில், அம்மக்கள், தங்கள் நிலங்களைப் பயன்படுத்துவதற்கு, இச்சட்டங்கள் அச்சுறுத்தலாக உள்ளன என்று சொல்லி, ராஞ்சிப் பேராயர், கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள குழு ஒன்று, மாநில ஆளுனரிடம் மனு கொடுத்துள்ளது.

பிஜேபி கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள், பூர்வீக மக்களுக்கு எவ்வித நலனையும் கொண்டு வராது, மாறாக, நிலங்களைக் கையகப்படுத்தவே இவை வழியமைக்கும் என்று குறை கூறினார், கர்தினால் டோப்போ.

ஆளுனர் Draupadi Murmu அவர்களிடம், கர்தினால் டோப்போ தலைமையிலான கிறிஸ்தவர்கள் குழு ஒன்று, இது குறித்த மனுவைச் சமர்ப்பித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.