2017-03-13 16:06:00

நோயெனும் சிலுவையை சுமந்து வாழ்வளிக்க முடியும்


மார்ச்,13,2017. இஞ்ஞாயிறன்று, உரோம் நகரின் புனித மகதலேனா கோவிலுக்கு, உரோம் ஆயர் என்ற முறையில் சந்திக்கச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, இளையோர், நோயுற்றோர் மற்றும் முதியோரை சந்தித்து உரையாடினார்.

பங்குதள விளையாட்டு மைதானத்தில், சிறாரையும், இளையோரையும் முதலில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, பின்னர், கடந்த ஓராண்டில் திருமுழுக்குப் பெற்ற குழந்தைகளின் பெற்றோரையும், நோயாளிகளையும், முதியோரையும் பங்குதள அரங்கில் சந்தித்து கலந்துரையாடினார்.

'நோய் என்பது சிலுவையாயினும், அந்த சிலுவையைச் சுமந்து செல்வதன் வழியாக நாம் பிறருக்கு வாழ்வளிக்க முடியும், ஏனெனில், அது வாழ்வின் விதை’ என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு பங்குதள மக்களுக்கு நிறைவேற்றியத் திருப்பலியில், இயேசுவின் உருமாற்றம் குறித்த மறையுரையையும் வழங்கினார்.

உருமாற்றத்தின்போது ஒளிர்விட்டது, மற்றும், அவரின் பாடுகளும் மரணமும் என இயேசுவின் இரண்டு முகங்கள் குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.