2017-03-15 16:04:00

இந்தியாவில் 48 ஆண்டுகளாக பணியாற்றிய அமைப்பு, பணி நிறுத்தம்


மார்ச்,15,2017. இந்தியாவில் கடந்த 48 ஆண்டுகளாக வறுமைப்பட்ட குழந்தைகள் மத்தியில் பணியாற்றிவந்த Compassion International என்ற பிறரன்பு அமைப்பு, தன் பணிகளை, மார்ச் 15, இப்புதன் முதல் இந்தியாவில் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

1968ம் ஆண்டு முதல் பணியாற்றிவந்த Compassion International என்ற அரசு சாரா அமைப்பு, தன் பணியைத் தொடர்வதற்கு, இந்திய அரசு அனுமதி தர மறுத்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஆசிய செய்தியும், UCAN செய்தியும் கூறுகின்றன.

Compassion International என்ற அமைப்பு, தன் பணிகள் வழியே, மத மாற்றம் செய்கிறது என்று, இந்தியாவில் தற்போது ஆட்சி செய்துவரும் பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ள ஆதாரமற்ற கருத்தையொட்டி, இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Compassion International அமைப்பு, இந்தியாவில், 589 கிளை நிறுவனங்கள் வழியே, வறுமைப்பட்ட 1,47,000 குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வந்தது என்றும், உதவியடைந்தவர்களில் 76 விழுக்காட்டினர், இந்து குழந்தைகள் என்றும், ஆசிய செய்தி தெரிவிக்கிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.