சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

திருத்தந்தை எகிப்துக்குத் திருத்தூதுப்பயணம் ஏப்.28-29,2017

எகிப்தில் எலியாகு ஹனாவி தொழுகைக் கூடம் - AFP

18/03/2017 15:13

மார்ச்,18,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஏப்ரலில், எகிப்து நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் புர்கே அவர்கள், இச்சனிக்கிழமையன்று, செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

எகிப்து நாட்டு அரசுத்தலைவர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், காப்டிக் கிறிஸ்தவ சபைத் தலைவர், திருத்தந்தை 2ம் Tawadros, Al Azhar மசூதியின் பெரிய தலைவர் Sheikh Ahmed Mohamed el-Tayyib ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, புர்கே அவர்கள், கூறினார்.

இத்திருத்தூதுப் பயணம், வருகிற ஏப்ரல் 28, 29 ஆகிய இரு நாள்கள் இடம்பெறும் எனவும், இப்பயணம் குறித்த விவரங்கள், பின்னர் வெளியிடப்படும் எனவும், புர்கே, அவர்கள், செய்தியாளர்களிடம் அறிவித்தார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/03/2017 15:13