2017-03-21 14:54:00

தவக்காலச் சிந்தனை: தனித்திரு! செபித்திரு!


இன்று, இரு பெரும் தேவைகள்பற்றி சிந்திப்போம். அவை, தனித்திருத்தல், செபித்திருத்தல். இறைவழியில் நடை பயில, இவை இரண்டும் நமக்கு உதவி புரிகின்றன. ஒரு மணி நேரம் உங்களால் விழித்திருக்க இயலவில்லையா என்ற கேள்வி நமக்குள் எழட்டும். இந்த தவக்காலத்தில், நமக்கும் இறைவனுக்கும் இருக்கும் உறவை வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு நாளும், சிறிது தனித்திருந்து, செபிக்க முயற்சி செய்வோம். ஆயிரம் தேவைகள் நம்மை அணுகினாலும், ஆண்டவருக்காக, ஒரு அரைமணி நேரமாவது நம்மை தனிமைப்படுத்துவோம். இயேசுவின் செபமும், தவமும் நமக்கு எடுத்துக்காட்டுகள். தான தர்மங்களைச் செயல்படுத்தும், இந்நாள்களில், இறைவனோடு இணைந்திருக்க இவை நமக்குத் தேவை. நமது குடும்பங்களில், செப ஒளி வீசட்டும். ஒவ்வொரு தனிமனிதரின் தனிமையிலும், குழும உறவிலும் செபங்கள் அதிகமாய் இருக்கட்டும். நம் வாழ்வில் சந்திக்கும் சலனங்களை நம் செபத்தால்  வென்றிடுவோம். சிலுவைப்பாதைகளையும், திருப்பலிகளையும் சேர்த்து, மேலும் இறைவனோடு தனிமையில், குழுவில், செபத்தில் இணைத்திருப்போம். இறைவன் எந்நாளும் நம்மோடு இருக்க, இந்த சிறப்பான காலத்தில் நாம் இறைவனோடு இருக்க முயற்சிப்போமா!

இதோ! நாம் இறைவனோடு!

- அருள்சகோதரர் இராசசேகரன் சே.ச.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.