2017-03-22 16:35:00

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு


மார்ச்,22,2017. ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் Reinhard Marx அவர்கள் தலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு அரசுத் தலைவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 24, வருகிற வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்திக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம் உருவாக அடிப்படையாக விளங்கிய ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தின் ஒப்பந்தம், உரோம் நகரில் கையெழுத்திடப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவு, மார்ச் 25ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இந்நிகழ்வையொட்டி, உரோம் நகருக்கு வருகை தரும் ஐரோப்பிய அரசுத் தலைவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 24ம் தேதி வத்திக்கானில் சந்திக்கிறார்.

மேலும், இவ்வாண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி முதல், 29ம் தேதி முடிய, வத்திக்கானில் நடைபெறவுள்ள ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆயர் பேரவைகளின் மாநாட்டிற்கு தயாரிப்பாக, மார்ச் 29ம் தேதி, வருகிற புதன் முதல், 31 வெள்ளி முடிய, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு, Brussels நகரில் தங்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

பல்வேறு அரசியல், மற்றும் சமுதாய மாற்றங்களைச் சந்தித்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், மனிதர்களை மையப்படுத்தி, தன் விவாதங்களையும், முடிவுகளையும் எடுக்கவேண்டும் என்ற கருத்தில், இக்கூட்டங்கள் நடைபெறும் என்று, கர்தினால் மார்க்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.