2017-03-22 16:15:00

திருத்தந்தைக்கு இத்தாலிய பிறரன்பு அமைப்பின் உதவிப் பொருள்கள்


மார்ச்,21,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கென, நீரில் நனையாத சிவப்பு நிற மேலாடைகளையும், ஆயிரம் Zainer பைகளையும், ஓர் இத்தாலிய பிறரன்பு அமைப்பு, இப்புதனன்று திருத்தந்தையிடம் வழங்கியது.

FIPE நிறுவனத்தைச் சார்ந்த S.I.B. என்ற இத்தாலிய அமைப்பின் 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தினருடன், வாழ்வைப் பாதுகாக்கும், நீரில் நனையாத சிவப்பு நிற மேலாடைகளை அணிந்துகொண்டு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டு, பின்னர், திருத்தந்தையிடம் வழங்கினர்.

இத்தாலியின் கடலோர, சில பங்குத்தள அருள்பணியாளர்களும், Chioggia ஆயர் Adriano Tessarolo அவர்களும், இந்த அமைப்பினரோடு வந்திருந்தனர்.

கடல்களில் குளிக்கும்போது, உடலை நனையாமல் பாதுகாக்கும் இந்த மேலாடை ஒன்றில், மீட்பு என எழுதப்பட்டு, அது திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது. அதை திருத்தந்தையும் சிறிதுநேரம் அணிந்திருந்தார்.

இந்த அமைப்பு திருத்தந்தையிடம் வழங்கிய இந்தப் பொருள்கள், தேவையில் இருப்போருக்கு, இயேசுவின் உயிர்ப்பு விழாவுக்குள், திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான அலுவலகம் வழியாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.