2017-03-24 15:15:00

தவக்காலச் சிந்தனை - உடனிருத்தல்


மார்ச்,25,2017. இந்த தவக்காலத்தில், இன்று, அன்னைமரி வழியாக, இறைவன் தன்  உடனிருப்பை நம்மோடு பதிவு செய்யும் நாள். தூதரின் வழியாய், தூது சொல்லும் இறைவன், நமக்கோர் எடுத்துக்காட்டு. நம் வாழ்வு மாறிட, மாட்சி அடைந்திட, இறைவனின் உடனிருப்பு, நமக்கு நம்பிக்கையை, மகிழ்ச்சியைத் தருகிறது. இன்றைய நாளில், நமது உடனிருப்பை சற்று உற்று பார்ப்போம். நமது குடும்பங்களில், கணவன் மனைவி, பிள்ளைகள், வயது முதிந்தோர், அருகில் இருப்பவர்கள், நம்மோடு வேலை செய்பவர்கள், இவர்களோடு, நமது இருப்பு எப்படி? நேர்மறையான, நம்பிக்கை தரும் இருப்பாக இருக்கிறதா? நமது இருப்பை மற்றவர்கள் எவ்வாறு விரும்புகிறார்கள்? தொலைதூரத்தைக் குறைக்க வந்த தொடர்புக் கருவிகள், இன்று, நம் அருகாமையை தொலைதூரமாக்கி விட்டன. கூடி வாழ்ந்த நம் வாழ்வு முறை, இன்று, கூறு போடப்பட்டு, தொடர்பை இழந்திருக்கிறது. மன அழுத்தம் நிறைந்த இயந்திர வாழ்வில், யாருக்கு நமது இருப்பு முக்கியம் என்பதை மறந்து வாழ்கிறோம். அதிகமான பணிச்சுமையால், பிள்ளைகளை மறந்துவிடும் பெற்றோர்கள், சுற்றி இருப்பவர்களை கண்டுகொள்ளாத வாழ்க்கை முறையால், நேரம் இல்லை என்ற சாக்குபோக்குகளால், பெற்றவர்களை பரிதவிக்கவிடும் பிள்ளைகள், என வாழும் நமக்கு, நம் உடனிருப்பை, நல்ல, நேரிய, உரிய முறையில் பகிர,  இத்தவக்காலம் இன்று நம்மை அழைக்கின்றது.

தொலைவில் செல்லும் அருகாமையில், யாம் தொலைந்திடாது, 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருக்கட்டும், இந்நாடே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.