சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

தவக்கால சிந்தனை.. வீழ்ந்தோரைத் தூக்கிவிடுவோம்

இயேசு சிறுவனை குணப்படுத்துகிறார் - RV

27/03/2017 16:11

உடல் நலமற்று வீழ்ந்துகிடந்த ஒருவரை குணமாக்கி தூக்கிவிடுகின்றார், இயேசு. நாம் வாழும் இந்த சமுதாயத்தில் அநேகர் வீழ்ந்துகிடக்கின்றனர். வறுமையினால் பாதிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் இன்றி வீழ்ந்துகிடக்கின்றனர், ஏழைகள்.

போர்களினாலும், உள்நாட்டு பிரச்சனைகளினாலும், வாழ இடமின்றி வீழ்ந்துகிடக்கின்றனர், புலம்பெயர்ந்தோர்.

போதைக்கு அடிமைப்பட்டு, தன் கடமைகளை மறந்து, இளையோரும், குடும்பத்தலைவர்களும் வீழ்ந்துகிடக்கின்றனர்.

சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்டு, வாழ்க்கைச் சுமை தாங்காமல் வீழ்ந்துகிடக்கின்றனர், திருநங்கைகள்.

இவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளும், மனத்துயரங்களும், கணக்கிட இயலாதவை. இவர்களை தூக்கிவிட, இயேசு நமக்கு அழைப்புவிடுகின்றார். தேவையில் இருப்பவர்கள், கேட்டவுடன் உதவுவது, மனிதம்; தேவையை உணர்ந்து உதவுவது, புனிதம். எனவே தேவைகளை உணர்ந்து வீழ்ந்துகிடப்பவர்களை தூக்கிவிட முயல்வோம் (அ.சகோ. செலூக்காஸ் சே.ச.).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

27/03/2017 16:11