சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அரசியல், பொருளாதாரம்

நற்செய்தி அறிவித்ததற்காக சீனாவில் தடுப்புக் காவலில் குரு

சீனாவின் பெய்ஜிங் ஆலயம் ஒன்றில் கூடியிருக்கும் விசுவாசிகள் - EPA

28/03/2017 16:21

மார்ச்,28,2017. நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டக் குற்றத்திற்காக 6 மாதம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சீன அருள்பணியாளர் ஒருவருக்கு நீதி மன்ற தீர்ப்பு வழங்காமல் காவலை நீட்டித்துள்ளது சீன அரசு.

சீனாவின் Liaoning என்ற மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் Fei Jisheng என்பவர், முதியோர் இல்லத்திலிருந்து பணத்தைக் கையாடிவிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 6 மாதங்களுக்கு முன்னர் அவரைக் கைது செய்த சீன அரசு, தற்போது இரகசிய விசாரணைகளுக்குப்பின், நீதிமன்றத்திற்குக் கொணர்ந்தும், எந்த தீர்ப்பும் வழங்காமல், தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

காவல் துறையினரால் நீதிமன்றத்திற்குக் கொணரப்பட்ட அருள்பணியாளர் Jisheng அவர்களுடன் நீதிமன்றத்திற்குள் நுழைய, 4 சாட்சிகளுக்கும் அவரின் வழக்குரைஞர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி

28/03/2017 16:21