சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல் – கந்தமால் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட வன்முறைகள்

கந்தமால் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் - RV

30/03/2017 10:31

மார்ச்,30,2017. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, சிறுபான்மை கிறிஸ்தவர்க்கெதிராக ஆரம்பித்த வன்முறைகளில், ஏறக்குறைய நூறு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். 395 ஆலயங்களும், 6,500 கிறிஸ்தவ வீடுகளும் அழிக்கப்பட்டன. ஏறக்குறைய 56 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு, கட்டாயமாக வெளியேறி, அருகிலிருந்த காடுகளில் ஒளிந்து கொண்டனர். அச்சமயங்களில், பசி மற்றும், பாம்புக் கடியினால் பலர் இறந்தனர். இந்தியத் தலத்திருஅவை, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30ம் தேதியை, கந்தமால் மறைசாட்சிகள் நாளாகச் சிறப்பித்து வருகிறது. பேராயர் ஆஸ்கர் ரொமேரோ கொல்லப்பட்ட மார்ச் 24ம் தேதி, மறைசாட்சிகள் நாளாகச் திருஅவையில்,சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இயேசு சபை  அ.பணி. ஜோசப் சேவியர் அவர்களிடம் கந்தமால் கிறிஸ்தவ மறைசாட்சிகள் பற்றிக் கேட்டோம். இவர், கந்தமாலில் கிறிஸ்தவர் மத்தியில் பணியாற்றியிருப்பவர். தற்போது இவர், உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், அச்சபையின் JRS புலம்பெயர்ந்தோர் அமைப்பின் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு வழக்கறிஞர் மற்றும், மனித உரிமை ஆர்வலர். இயேசு சபையின் தெற்காசிய சமூகப் பணி ஒருங்கிணைப்பாளர்(2001-2007), பெங்களூரு இயேசு சபையினரின் ISI சமூக நிறுவனத்தில் மனித உரிமைகள் துறை பொறுப்பாளர்(2007-2009), டெல்லி இயேசு சபையினரின் ISI சமூக நிறுவனத்தின் இயக்குனர்(2012-2015) என, முக்கிய பொறுப்புக்களை வகித்திருப்பவர் அருள்பணி ஜோசப் சேவியர் சே.ச.

30/03/2017 10:31