2017-04-01 17:03:00

அமல அன்னை விழா, பிலிப்பீன்ஸ் நாட்டில் அரசு விடுமுறை


ஏப்.,01,2017. டிசம்பர் மாதம் 8ம் தேதி உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படும்  'அமல உற்பவ அன்னை' திருவிழாவை, இவ்வாண்டு முதல் தேசிய விடுமுறை நாளாக அறிவித்துள்ளது, பிலிப்பீன்ஸ் அரசு.

மார்ச் மாதம் 29ம் தேதி பிலிப்பீன்சின் கீழ் அவை நிறைவேற்றிய, இந்த தேசிய விடுமுறை நாள் சட்டம் பற்றிக் குறிப்பிட்ட பாராளுமன்ற அங்கத்தினர் Rodolfo Farinas அவர்கள், கத்தோலிக்கர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பிலிப்பீன்சில், அமல உற்பவ அன்னைத் திருவிழா, மிக முக்கியத்துவம் நிறைந்த ஒன்று என்றார்.

1942ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், அமல உற்பவ அன்னையை, பிலிப்பீன்சின் பாதுகாவலியாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.