2017-04-01 16:14:00

தவக்காலச் சிந்தனை- கடவுள் கைபட்டால், உயிர்பெறும் புதுமைகள்


இயேசு, இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய புதுமை, ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருஅவை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். அடுத்த நாள், அடுத்த மணி நேரம், உயிருடன் இருப்போமா என்ற கேள்வி, ஆதி கிறிஸ்தவர்களின் கழுத்தைச் சுற்றிக்கொண்ட ஒரு கருநாகத்தைப் போல், எப்போதும் இவர்களை நெருக்கிக்கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்ட தங்களையும், தங்கள் திருஅவையையும், இறைவன், உயிருடன் வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வளர்க்க, இயேசு, இலாசரை உயிருடன் கொணர்ந்த புதுமை உதவியது.

இதே எண்ணங்களை, இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில், ஒவ்வொரு நாளும், இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை, கடவுள், மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று, இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37: 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன்... என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, எதுவாக இருந்தாலும், கடவுள் கைபட்டால், புதுமைகளாய் உயிர்பெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.