2017-04-01 17:09:00

யோகாவை கல்வித் திட்டத்தில் இணைப்பதை எதிர்த்தவருக்கு சிறை


ஏப்.,01,2017. கல்விக் கூடங்களில் யோகாவை கட்டாயமாகப் புகுத்தும் அரசின் முயற்சியை விமர்சித்ததற்காக, தமிழகத்தில், கிறிஸ்தவப் போதகர் ஒருவர், கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கூடங்களில் யோகாசன பயிற்சி முறையை கட்டாயமாக்க முயலும் அரசு, இந்து வாழ்க்கை முறையை திணிக்கப் பார்க்கிறது என கிறிஸ்தவப் போதகர் மோகன் என்பவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அவர் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார், இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத் தலைவர் சாஜன் ஜார்ஜ்.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் தலித் மக்களிடையே பணியாற்றி, சமூக மேம்பாட்டிற்கு பங்காற்றிவரும் போதகர் மோகன்  அவர்கள், யோகாசனத்தின் நல்விளைவுகள் குறித்து பலமுறை பாராட்டிப் பேசியுள்ள போதிலும், அதனைக் கல்வித் திட்டத்தில் கட்டாயமாக புகுத்துவதை எதிர்த்துப் பேசியதற்காக கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.