சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

இயேசுவோடு இணைந்திருக்கும்போது, இதயங்களில் மகழ்ச்சி தங்கும்

வெண்புறாக்களை பறக்கவிடும் திருத்தந்தை - REUTERS

03/04/2017 17:09

ஏப்.,03,2017. 'இறைவன் நம்மருகே இருந்து நம்மீது அக்கறைக் கொண்டு செயல்படுகிறார் என்பதை, தூய ஆவியார் நம் இதயங்களில் குடியிருக்கும்போது, நமக்குப் புரியவைக்கிறார்' என இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

@pontifex என்ற முகவரியில் திருத்தந்தை உருவாக்கிய இச்செய்தி, வழக்கமான 9 மொழிகளில் வெளியானது.

மேலும், ஞாயிறு மாலை, 8.30 மணியளவில், வெளியிட்ட பிறிதொரு டுவிட்டர் செய்தியில், 'இயேசுவோடு நாம் இணைந்திருக்கும்போது, நம் இதயங்களில் மகழ்ச்சி தங்கும், நம்பிக்கை மீண்டும் பிறக்கும், வேதனை என்பது அமைதியாக மாறும்,   அச்சம் என்பது உறுதியான நம்பிக்கையாக உருவெடுக்கும், சோதனை என்பது அன்பை வழங்குவதாகவும் மாறும்' என எழுதியுள்ளார், திருத்தந்தை.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கார்பி மக்கள் நடுவே மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, வத்திக்கானுக்குத் திரும்பியபின், கார்பி மக்களை மனதில் கொண்டு, வழங்கிய இச்செய்தி, இத்தாலிய மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

03/04/2017 17:09