2017-04-07 13:09:00

தவக்காலச் சிந்தனை : எனக்காக இறைவா


“எனக்காக இறைவா, எனக்காக, இடர்பட வந்தீர் எனக்காக” என்ற பாடலை அறிவோம். இன்றைய வாசகங்களின் சுருக்கமாக இந்தப் பாடல் இருக்கிறது. இயேசுவின் சிலுவை பயணத்தின் தீர்க்கதரிசனம் கயபாவின் கூற்றாக வருகிறது. கண்டதால் நம்பிய பலர், கண்டும், அதை பரிசேயரிடமும், குருக்களிடமும் புகார் செய்த சிலர் என பல்வேறு வகையான மக்களின் மனப்பாங்கை நமக்குக் காட்டுகிறது. இதில் நாம் எந்த வகையானவர்கள் என்று சிந்திப்போம். சில நேரங்களில், மேலே குறிப்பிட்டுள்ள அனைவரது குணங்களையும் நாம் கொண்டிருக்கின்றோம். பிறர் வளர்ச்சியில் பொறாமையும், தனித் தனிக் குழு அமைப்பதிலும், சுயநலனுக்காக, சமுதாய அந்தஸ்திற்காக, மற்றவரின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்திருக்கிறோம். நமது தவறை மறைக்க, மற்றவர்களை பலியாடாய் மாற்றியிருக்கிறோம். நமது பாவங்களுக்கு கழுவாயான இயேசு போன்று, சமூக மாற்றத்துக்காக, தன்னையே பலியாக அர்ப்பணித்து, இயேசுவின் வழியில் பயணித்த மனிதர்களும் இன்று நம் கண்முன்னே இருக்கிறார்கள். இத்தவக்காலத்தில், சிந்திப்போம், நாம் தீர்ப்பளிக்கும் கயபாவாகவா, அல்லது, தன்னை பலியீந்த இயேசுவாகவா?  நமக்காக இடர்பட்ட இயேசுவின் மனநிலையில் வாழ, வளர, இச்சமூகம் வளம் பெற, முயற்சிப்போம்.

இயேசுவின் மனநிலையில், இதோ நாம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.