2017-04-07 15:01:00

முன்னாள் போதைப்பொருள் அடிமைகளின் காலடிகளைக் கழுவுகிறார்


ஏப்.,07,2017. ஏப்ரல் 13, புனித வியாழனன்று, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வெளிவந்தவர்கள் காலடிகளைக் கழுவுகிறார் என்று மணிலா உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

புனித வியாழன் காலடிகள் கழுவும் சடங்கில், கடந்த சில ஆண்டுகளாக, கர்தினால் தாக்லே அவர்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் இவர்களின் காலடிகளைக் கழுவியுள்ளார் என்று UCAN செய்தி கூறுகிறது.

மேலும், இவ்வாண்டு, மணிலா பேராலயத்தில் நடைபெறும் காலடி கழுவும் சடங்கில், காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் காலடிகளையும் கர்தினால் தாக்லே அவர்கள் கழுவவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டின் அரசுத் தலைவராக, Rodrigo Duterte அவர்கள் பொறுப்பேற்றபின், போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கத்துடன், போதைப்பொருள் வர்த்தகர்கள், பயன்பாட்டாளர்கள் அனைவரையும் கொலை செய்வது குறித்து, பிலிப்பின்ஸ் ஆயர்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.