சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

நினிவே சமவெளியில் மீண்டும் புதிய வாழ்வின் மூச்சுக்காற்று

முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ - AFP

12/04/2017 15:43

ஏப்.,12,2017. ஈராக் நாட்டில் விடுக்கப்பட்டுள்ள நினிவே சமவெளியில் மீண்டும் புதிய வாழ்வின் மூச்சுக்காற்றை உருவாக்குவதே, இந்த உயிர்ப்புக் காலத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஈராக் கிறிஸ்தவர்களுக்கு அமையவேண்டும் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

ஈராக்கிலும், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் உள்ளங்களை உடைக்கும்வண்ணம், ஒவ்வொரு நாளும் வந்து சேரும் செய்திகளைக் கடந்து, நாம் உயிர்ப்பைக் கொண்டாடவேண்டும் என, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் உயிர்ப்புச் செய்தியில் கூறியுள்ளதை ஆசிய செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக்கிலும், ஏனைய மத்தியக் கிழக்கு நாடுகளிலும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து வருகிற போதிலும், 'இந்தச் சிறு மந்தை'யின் நம்பிக்கையும், பிறரன்பும், மீண்டும், இப்பகுதியில், கிறிஸ்தவ சமுதாயத்தை வளர்க்கும் என்று, முதுபெரும் தந்தை, தன் செய்தியில் கூறியுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக ஈராக் நாட்டில் நிகழ்ந்துள்ள கசப்பான நிகழ்வுகளை மனதில் சுமந்து செல்லாமல், கிறிஸ்தவர்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கவும், ஒப்புரவு, உரையாடல் வழியே அமைதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்கவும், முதுபெரும் தந்தை சாக்கோ, தன் உயிர்ப்புவிழா செய்தியில் விண்ணப்பித்துள்ளளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

12/04/2017 15:43