சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

கானடாவின் 150ம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு ஆயர்கள் செய்தி

கானடாவின் ஒட்டாவாவில் நாடாளுமன்றத்தின் முன் கொடியுடன் மக்கள் - AFP

18/04/2017 14:50

ஏப்.18,2017. கானடா நாடு சுதந்திரம் அடைந்ததன் 150ம் ஆண்டு நிறைவு, வருகிற ஜூலை முதல் நாளில் சிறப்பிக்கப்படவுள்ளவேளை, அத்தினத்திற்கென செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர்.

Ontario மாநிலத்தின் Hamilton ஆயர் Douglas Crosby அவர்கள் வெளியிட்டுள்ள நான்கு பக்க சுதந்திர தினச் செய்தியில், கானடா நாளின் விழாக் கொண்டாட்டங்கள் அண்மித்துவரும்வேளை, ஆயர்களும், கத்தோலிக்கரும் அகமகிழ்கின்றோம் எனக் கூறியுள்ளார்.

நம் பூர்வீக நாடான கானடாவை இறைவன் எப்போதும் மகிமையுள்ள மற்றும் சுதந்திர நாடாகக் காப்பாராக என்றும், இந்நாட்டின் பூர்வீக மக்கள் உட்பட, இந்நாட்டினர் எல்லாரும், நல்லதோர் உலகையும், நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு தொடர்ந்து உழைப்பதற்கு இறைவன் உதவுவாராக என்றும், அச்செய்தியில் கூறியுள்ளார், கானடா ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Douglas Crosby.

வட அமெரிக்க நாடாகிய கானடா, 1867ம் ஆண்டு ஜூலை முதல் நாளன்று, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.

ஆதாரம் : CWN /வத்திக்கான் வானொலி

18/04/2017 14:50