சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

பேராயர் Fulton Sheen நினைவாக சிறப்பு திருப்பலி நிறைவேற்ற..

பேராயர் Fulton J. Sheen

18/04/2017 15:01

ஏப்.18,2017. மறைந்த பேராயர் Fulton J. Sheen அவர்களின் நினைவாக, அவர் பிறந்த நாளான மே 8ம் தேதி, உலகின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுமாறு, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வேண்டுகோளை வெளியிட்டுள்ள CNS கத்தோலிக்கச் செய்தி, ஏப்ரல் 13, கடந்த வியாழன் நிலவரப்படி, இவ்வேண்டுகோளை நிறைவேற்றுவதாக, 900 ஆலயங்களிலிருந்து பதில் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

1950ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை, நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிய, மறைந்த பேராயர், Fulton J. Sheen அவர்கள், நற்செய்தி உலகெங்கும் பரவ உழைத்தவர்.

பேராயர் Fulton J. Sheen அவர்களை, புனிதராக உயர்த்துவதற்கென எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அவரின் பிறந்த நாளன்று சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பேராயர் Fulton J. Sheen அவர்கள், 1979ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி

18/04/2017 15:01