சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

"உயிர்ப்பு என்ற பேருண்மையை, வியப்போடு தியானிப்போமாக"

Aparecida அன்னை மரியாவிடம் செபிக்கிறார் திருத்தந்தை - OSS_ROM

19/04/2017 16:47

ஏப்.19,2017. "ஆண்டவருடைய உயிர்ப்பு என்ற பேருண்மையை, வியப்போடும், நன்றியோடும் தியானிப்போமாக" என்ற அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, ஏப்ரல் 19, இப்புதனன்று வெளியிட்டார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலநாட்களுக்கு முன், பிரேசில் நாட்டு அரசுத்தலைவர், Michel Temer அவர்களுக்கு அனுப்பிய ஒரு மடலைக் குறித்த விவரத்தை, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் இச்செவ்வாயன்று வெளியிட்டது.

2017ம் ஆண்டு, Aparecida அன்னை மரியாவின் 300வது ஆண்டு நிறைவு, பிரேசில் நாட்டில் சிறப்பிக்கப்படுவதையொட்டி,   அரசுத்தலைவர் Michel Temer அவர்கள், திருத்தந்தையை தங்கள் நாட்டுக்கு வரும்படி ஒரு மடலின் வழியே விடுத்திருந்த அழைப்புக்கு, பதில் மடல் அனுப்பிய திருத்தந்தை, இவ்வாண்டு, தன்னால், பிரேசில் நாட்டிற்கு வரமுடியாத நிலையை எடுத்துரைத்து, வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும், அரசுத்தலைவர் Michel Temer அவர்கள், பிரேசில் நாட்டில் நிலவும் சமுதாயப் பிரச்சனைகளைக் குறித்து தன் மடலில் குறிப்பிட்டிருந்ததால், அதைக் குறித்து தன் கருத்தை வெளியிட்ட திருத்தந்தை, மக்கள் பிரச்சனைகளைக் களைய, பிரேசில் அரசும், தலத்திருஅவையும் இணைந்து உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

19/04/2017 16:47