2017-04-19 17:14:00

தென்னிந்திய தவளையிடமிருந்து காய்ச்சலை தடுக்கும் மருந்து


ஏப்.19,2017. தவளையிடமிருந்து கிடைக்கும் ஒருவித பிசுபிசுப்பான திரவம், ஃப்ளூ (Flu) தொற்றைத் தடுக்க ஒரு புதிய வழியை வழங்கும் என்று அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்னிந்திய தவளை இனம் ஒன்றின் தோலிலிருந்து வெளிப்படும் திரவம் ஒன்றிலிருந்து பெறப்படும் வேதிப்பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த பிசுபிசுப்பான திரவம் ஆய்வகச் சோதனைகளில் ஃப்ளூ காய்ச்சல் கிருமிகள் பலவற்றைக் கட்டுப்படுத்தும் குணம் பெற்றதென கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு எதிராக செயலாற்ற உருமின் என்றழைக்கப்படும் இந்தக் கூட்டுப்பொருளை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தீர்மானிக்க மேற்கொண்டு ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.