சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

எகிப்து இஸ்லாமிய மையத்தில் உரையாற்ற, திருத்தந்தைக்கு அழைப்பு

திருத்தந்தையுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு - AP

20/04/2017 16:16

ஏப்.20,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 28, 29 தேதிகளில் எகிப்து நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், கெய்ரோவில் உள்ள அல்-அசார் (al-Azhar) இஸ்லாமிய மையத்தில் நடைபெறும் பன்னாட்டு அமைதி கருத்தரங்கில் உரையாற்ற அழைப்பு பெற்றுள்ளார்.

அல்-அசார் இஸ்லாமிய மையத்தின் தலைவர், Sheikh Ahmed al-Tayeb அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு அவர்களையும், இக்கருத்தரங்கில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், எகிப்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் திருத்தந்தை, 2ம் Tawadros அவர்களும், இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள, அழைப்பு பெற்றுள்ளார்.

இஸ்லாமிய, கிறிஸ்தவ, கத்தோலிக்க தலைவர்களிடையே நிகழவிருக்கும் இத்தகைய ஒரு சந்திப்பு, இன்றைய உலகிற்குத் தேவையான ஓர் அருளடையாளம் என்று, எகிப்தின் முன்னாள் திருப்பீடத் தூதரான, பேராயர் Michael Fitzgerald அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

20/04/2017 16:16