சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

மலேசியாவில் 1000த்திற்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்றனர்

மலேசியாவில் சிறுவனுக்கு திருமுழுக்கு வழங்கும் அருள்பணியாளர். - RV

20/04/2017 16:56

ஏப்.20,2017. மலேசியாவின் Kota Kinabalu உயர் மறைமாவட்டத்தில் இந்த உயிர்ப்பு விழாவையொட்டி, 1000த்திற்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்றனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

குழந்தைகளும், வயது வந்தவர்களும் இணைந்திருந்த இக்குழுவைச் சேர்ந்த 41 பேர், Karamunsing என்ற இடத்தில் உள்ள திரு இருதய பேராலயத்தில், பேராயர் ஜான் வோங் முன்னிலையில் திருமுழுக்கு பெற்றனர்.

மேலும், 244 பேருக்கு, புனித பீட்டர் கிளேவர் ஆலயத்தில், திருமுழுக்குடன், புதுநன்மையும் வழங்கப்பட்டதென்று ஆசிய செய்தி கூறுகிறது.

எகிப்து நாட்டில் நிகழ்ந்த படுகொலைகள் நம் மனதை பாதித்தாலும், உயிர்த்த இறைவன் கொண்டுவரும் நம்பிக்கையை உலகெங்கும் ஏந்திச் செல்வது நமது கடமை என்று, புனித பீட்டர் கிளேவர் ஆலயத்தில், திருப்பலியாற்றிய அருள்பணி Nicholas Stephen அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

20/04/2017 16:56