2017-04-24 16:16:00

அல்லேலூயா உரைக்குப் பின் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


ஏப்.24,2017. இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாட, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள திருப்பயணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின், சிறப்பான முறையில் வாழ்த்தினார்.

மேலும், இஞ்ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் துவங்கி, ஜெர்மனியின் விட்டென்பெர்க் (Wittenberg) நகரில் நிறைவடையும் 'அமைதிக்கான ஓட்டம்' என்ற தொடர் ஓட்ட முயற்சியில் பங்கேற்போரை திருத்தந்தை வாழ்த்தினார்.

உயிர்ப்பு விழாவையொட்டி, தனக்கு வாழ்த்துக்கள் அனுப்பியிருந்த அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

மேலும், இறை இரக்கத்தின் ஞாயிறையொட்டி, திருத்தந்தை தன் டுவிட்டர் பக்கத்தில் இரு செய்திகளை வெளியிட்டார்.

"இறைவனின் இரக்கம் என்றென்றும் உள்ளது; மூடியக் கதவுகளுக்கு முன்னரும், அது சலிப்பின்றி நிற்கிறது" என்ற செய்தியை, இஞ்ஞாயிறு காலை 10 மணியளவிலும், "தந்தையின் இரக்கம் என்ற கிணற்றிலிருந்து, இவ்வுலகிற்கு இரக்கத்தை அள்ளிச் செல்வதில் நாம் களைப்படையாமல் இருக்கும் வரத்திற்காக வேண்டிக்கொள்வோம்" என்ற செய்தியை, மாலை 6 மணிக்கும் திருத்தந்தை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.